Published : 24 Feb 2022 08:08 AM
Last Updated : 24 Feb 2022 08:08 AM
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள சீகேஹட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஹர்ஷா (26) கடந்த 20-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட வன்முறையில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு மசூதி, 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து ஷிமோகா, பத்ராவதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வரும் வெள்ளிக்கிழமை வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பொதுமக்கள் நடமாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு பதற்றம் நிலவுவதால் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஹர்ஷா கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் நேற்று முன்தினம் 3 பேரை கைது செய்த நிலையில், புதன்கிழமை மேலும் 3 பேரை கைது செய்தனர். இதனிடையே 21 பேரை பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT