Published : 24 Jun 2014 08:49 AM
Last Updated : 24 Jun 2014 08:49 AM

விஜயவாடா-குண்டூர் இடையே ஆந்திர தலைநகரம்: 12 ஆயிரம் ஏக்கர் அரசு நிலம் சர்வே

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகருக்காக விஜயவாடா அருகே 12,000 ஏக்கர் அரசு நிலம் சர்வே செய்யப்பட்டு இதற்கான அறிக்கையை அதிகாரிகள் அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் அடுத்த 10 ஆண்டுகள் வரை ஹைதராபாத் பொது தலைநகரமாக இருக்கும். இதற்கிடையே, ஆந்திராவிற்கு புதிய தலைநகரத்தை தேர்வு செய்ய கமலநாதன் கமிட்டி அமைக் கப்பட்டது.

இந்த கமிட்டி வரும் 30-ம் தேதிக்குள் ஆந்திராவில் உள்ள முக்கிய நகரங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

இக்கமிட்டி இதுவரை, விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், ஓங்கோல் ஆகிய இடங் களில் ஆய்வுப் பணி மேற்கொண் டது. 2-வது கட்டமாக, கர்னூல், நெல்லூர், திருப்பதி ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற் கொள்ள உள்ளது. இதனிடையே, ஆந்திர தலைநகர், விஜயவாடா-குண்டூர் இடையேதான் அமைய உள்ளதாக செய்திகள் வெளி வந்தன.

இந்நிலையில், விஜயவாடா வைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மாநில தலைநகருக்காக அரசு இடங்களை சர்வே செய்யத் தொடங்கினர். இவர்கள் விஜயவாடா அருகே சுன்னா என்கிற இடத்தில் வனத் துறைக்கு சொந்தமான 6,500 ஏக்கர் இடத்தையும், கொத்தூரு பல்லியில் 1,000 ஏக்கர் நிலமும், பாத்தபாடு பகுதியில் 1,500 ஏக்கரும் மேலும் இதன் சுற்றுபுறத்தில் ஆங்காங்கே 100, 50 என சுமார் 3,000 ஏக்கர் என மொத்தம் 12, 000 ஏக்கர் நிலங் களை அடையாளம் கண்டனர்.

இதுகுறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஆதலால், ஆந்திராவின் புதிய தலைநகரம், விஜயவாடா-குண்டூர் இடையே அமையும் என்பது ஏறக்குறைய முடிவாகி விட்டதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x