

நிலக்கரி சுரங்க மோசடி வழக்கில், தொழிலதிபரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நவீன் ஜிண்டால், முன்னாள் மத்திய அமைச்சர் தாசரி நாராயண ராவ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமர்கொண்டா முர்கடாங்கள் நிலக்கரிச் சுரங்கத்தை ஜிண்டால் ஸ்டீல் மற்றும் ககன் ஸ்பாஞ்ச் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இம்முறைகேடு தொடர்பான புகாரை விசாரித்த சிபிஐ, இதில், தொழிலதிபர் ஜிண்டால், முன்னாள் மத்திய அமைச்சர் தாசரி நாரயண ராவ், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, முன்னாள் நிலக்கரித் துறை செயலாளர் ஹெச்.சி. குப்தா மற்றும் 6 தனிநபர்கள், 5 தனியார் நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் அனைவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்ய நேற்று உத்தரவிட்டார்.