

கடந்த 2012-ம் ஆண்டு கேரள கடல் பகுதியில் 2 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதுதொடர் பாக அவ்வழியாக வந்த என்ரிகா லெக்சி சரக்குக் கப்பலில் இருந்த லத்தோர் மற்றும் சல்வடோர் ஜிரோன் ஆகிய 2 இத்தாலி கடற்படை வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே இந்த 2 வீரர்களும் தாய் நாடு செல்ல உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் லத்தோரின் கோரிக்கையை ஏற்று வரும் செப்டம்பர் 30 வரை தாய் நாட்டில் தங்கியிருக்க உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.