Published : 21 Feb 2022 06:42 AM
Last Updated : 21 Feb 2022 06:42 AM
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வசிப்பவர்கள் ஒட்டிப்பிறந்த சகோதரர்களான இரட்டையர்கள் சோஹன் சிங், மோஹன் சிங்.2003-ல் டெல்லியில் பிறந்த இவர்களை பெற்றோர் கைவிட்டனர்.அமிர்தசரசில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தனர்.
கடந்த ஆண்டு 18 வயதானதைத் தொடர்ந்து இவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றனர். இவர்களுக்கு பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜூ சமீபத்தில் தனித்தனியே வாக்காளர் அடையாள அட்டை களை வழங்கினார்.
இந்நிலையில், பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நேற்று நடந்த தேர்தலில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான சோஹன் சிங் மற்றும்மோஹன் சிங் தனித்தனி வாக்காளர்களாக கருதப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்களிப்பது ரகசியம் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்திருந்தனர். ஒருவர் வாக்களிப்பது இன்னொருவருக்குத் தெரியாமல் இருக்க இருவருக்கும் கருப்புக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. அங்குள்ள வாக்குச் சாவடியில் இரட்டையர்கள் முதல்முறையாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT