

பாட்டியாலா: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி துடைத்து எறியப்படும் என்று முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் தெரி வித்துள்ளார்.
பஞ்சாப் தேர்தலில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாட்டியாலா தொகுதியில் அமரீந்தர் சிங் போட்டியிடுகிறார். நேற்று பாட்டியாலாவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த பிறகு அமரீந்தர் சிங் கூறியதாவது:
பாட்டியாலா தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன். எங்கள் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும். எங்கள் கட்சிக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. கள நிலவரம் எங்களுக்கு சாதகமாக உள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி எங்களுக்கு பொருட்டே அல்ல.
அக்கட்சியின் முதல்வர் வேட் பாளராக அறி விக்கப்பட்டுள்ள பகவந்த் மான் தேச விரோதமாக செயல் படுகிறவர். அவர் அர்விந்த் கேஜ்ரிவாலை ஆதரிக்கிறார்.
காங்கிரஸ் கட்சி வேறு உலகத்தில் வாழ்ந்து கொண் டிருக்கிறது. அக்கட்சியில் இருந்து தலைவர்கள் வெளி யேறி கொண்டிருக்கின்றனர். மக்கள் ஆதரவை காங்கிரஸ் இழந்துவிட்டது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் துடைத்து எறியப்படும்.
இவ்வாறு அமரீந்தர் சிங் கூறினார்.