

‘‘அமங்கலமான நேரத்தில் மோடி பிரதமர் பதவியேற்றதுதான், நாட்டில் பேரழிவு ஏற்படுவதற்கு காரணம்’’ என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் கூறினார்.
பாட்னாவில் நேற்று செய்தி யாளர்களை சந்தித்து அவர் கூறிய தாவது:
நாட்டில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண, ஒவ்வொரு கிராமங்களிலும் 6 கிணறுகள் வெட்ட வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை நிலவும் இந்த நேரத்தில் யாகங்கள் நடத்த கூடாது. அவற்றை தள்ளிப்போட வேண்டும். மோடி கெட்ட நேரத்தில் பிரதமர் பதவியேற்றதுதான், நாட்டில் பேரழிவுகள் அதிகரிப் பதற்கு காரணம். (என்ன பேரழிவு என்று அவர் விரிவாக எதையும் சொல்லவில்லை.)
பிஹாரில் வெயில் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் தங்கள் குடிசை வீடுகள் தீப்பிடிக்காமல் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு லாலு பிரசாத் கூறினார்.