சபரிமலையில் கூடுதல் வசதிகள் கேரள ஆளுநர் உரையில் தகவல்

சபரிமலையில் கூடுதல் வசதிகள் கேரள ஆளுநர் உரையில் தகவல்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்துதரப்படும் என்று ஆளுநர் உரையில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரள சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில் மாநில ஆளுநர் உரையாற்றுவது வழக்கம். அடுத்த நிதி ஆண்டுக்கான திட்டங்கள் மற் றும் முன்முயற்சிகள் அவரது உரையில் இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நேற்று சட்டப் பேரவையில் ஆற்றிய உரையில் கூறியதாவது:

சபரிமலை ஐயப்பன் கோயில்மேம்பாட்டுக்கு அரசு உயர் முன்னுரிமை அளிக்கும். சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்துதரப்படும். பக்தர் களுக்கான நடுவழி தங்குமிடங்கள் பலப்படுத்தப்படும்.

இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள புகழ்பெற்ற கோயில்களை இணைக்கும் வகையில் யாத்திரை வழித் தடம் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது உரையில் கூறியுள்ளார். சபரிமலைக்கு உள்நாடு மட்டுமன்றி வெளி நாட்டினரும் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in