நடிகை கங்கணா ரனாவத்துக்கு சம்மன்: ஹிருத்திக் ரோஷன் புகாரில் நேரில் ஆஜராக மறுப்பு

நடிகை கங்கணா ரனாவத்துக்கு சம்மன்: ஹிருத்திக் ரோஷன் புகாரில் நேரில் ஆஜராக மறுப்பு
Updated on: 
1 min read

நடிகர் ஹிருத்திக் ரோஷன், கொடுத்த புகாரைத் தொடர்ந்து, நடிகை கங்கணா ரனாவத்துக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், அவர் நேரில் ஆஜராக மறுப்பு தெரிவித்துள்ளார்.

மூன்று முறை தேசிய விருது வென்றுள்ள பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத்தும், நடிகர் ஹிருத்திக் ரோஷனும் காதலிப்ப தாக தகவல் வெளியானது. அவர் கள் இருவரும் பிரிந்து விட்ட நிலையில், கங்கணாவும் இதை உறுதிப்படுத்துவது போல பேட்டி யளித்திருந்தார். இதையடுத்து, கங்கணாவுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார் ஹிருத்திக். பதிலுக்கு கங்கனா வும் நோட்டீஸ் அனுப்பினார்.

கங்கணா தனக்கு 1439 மின்னஞ்சல்கள் அனுப்பியதாக ஹிருத்திக் கூறினார். முதலில் ஹிருத்திக் பெயரிலான போலி யான மின்னஞ்சல் முகவரிக்கு மின் னஞ்சல்களை அனுப்பியிருந்த கங்கணா, பின்னர் அவற்றையும், அதற்கு கிடைத்த பதில்களையும், ஹிருத்திக்கின் அசலான மின் னஞ்சல் முகவரிக்கு அனுப்பி யிருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், தனது பெயரில் அடையாளம் தெரியாத ஒருவர் போலியான மின்னஞ்சல் முக வரியை உருவாக்கி, ரசிகர்களுடன் உரையாடியதாக ஹிருத்திக் ரோஷன் தரப்பில் மும்பை சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர் பாக கங்கணா மூலம் தெரிய வந்ததாக ஹிருத்திக் தெரிவித் திருந்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், கங்கணா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி யிடம் வாக்குமூலம் பெறுவதற்காக சம்மன் அனுப்பினர்.

ஆனால், கங்கணா தரப்பு வழக் கறிஞர் ரிஸ்வான், சிஆர்பிசி 160-வது பிரிவின்படி, ஒரு சாட்சியாக பெண்களாகிய இருவரும் வாக்கு மூலம் அளிப்பதற்காக காவல் நிலையம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித் துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in