மேற்குவங்கம், அசாமில் நாளை தேர்தல்

மேற்குவங்கம், அசாமில் நாளை தேர்தல்
Updated on
1 min read

மேற்குவங்கத்தில் 18 தொகுதிகள், அசாமில் 65 தொகுதிகளில் நாளை முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்ட உள்ளது. ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் முதல்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி புரூலியா, பாசிம் மிதினாபூர், பங்குரா மாவட்டங்களில் அமைந்துள்ள 18 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி, பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 18 தொகுதிகளிலும் திரிணமூல், பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இடதுசாரி கட்சிகள் 13 தொகுதிகளிலும் மீதமுள்ள 5 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸும் போட்டியிடுகின்றன. ஒட்டுமொத்தமாக 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தலையொட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று மேற்குவங்கத் தின் நியமத்பூரில் பிரச்சாரம் செய்தார். அவருடன் இடதுசாரி தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்றனர்.

அசாமில் 65 தொகுதி

அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 4, 11 ஆகிய தேதி களில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி நாளை 65 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறு கிறது.

இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜக கூட்டணியில் பாஜக, அசாம் கண பரிஷத், போடோ மக்கள் முன்னணி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒட்டுமொத்தமாக 539 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

2 மாநிலங்களிலும் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நேற்று மாலை யுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in