குடுச்சி மூலிகையால் கல்லீரல் பாதிக்கும் என்பது தவறானது: மத்திய அரசு விளக்கம்

குடுச்சி மூலிகை இலைகள்
குடுச்சி மூலிகை இலைகள்
Updated on
1 min read

புதுடெல்லி: 'ஜிலோய் / குடுச்சி மூலிகை கல்லீரலைப் பாதிக்கும் என ஊடகங்களில் சில பிரிவினர் மீண்டும் தவறான கருத்தை வெளியிட்டுள்ளனர். ஜிலோய் / குடுச்சி மூலிகை பாதுகாப்பானது, தற்போது கிடைக்கும் தரவுகளின்படி குடுச்சி எந்தவித நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தாதது' என்று ஆயுஷ் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''ஆயுர்வேதத்தில் குடுச்சியானது புத்துணர்ச்சிக்கு சிறந்த மூலிகை என கூறப்படுகிறது. எந்தவித நச்சுப் பாதிப்பும் ஏற்படுவதில்லையென்று குடுச்சியின் சாறு தொடர்பான ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரு மருந்தின் பாதுகாப்பு அதனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது பொருத்ததாகும். ஒரு மருந்தின் பாதுகாப்புத்தன்மையை தீர்மானிக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்றாக அளவும் இருக்கிறது.

எனவே, மூலிகைகளை தகுதி வாய்ந்த மருத்துவரால் பரிந்துரை செய்யப்படும் அளவுக்கு பயன்படுத்தினால் மட்டுமே மருத்துவப் பயன்களைப் பெற முடியும்.

இந்த மூலிகை சிகிச்சைக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டிருப்பது பிரபலமாக அறியப்பட்டதாகும். கோவிட்-19 நோய்த்தொற்றை குணப்படுத்தவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த சுகாதாரப் பயன்பாடுகளை கருதும்போது இந்த மூலிகை நச்சுத்தன்மை உள்ளது என கூற முடியாது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in