Published : 15 Feb 2022 07:15 AM
Last Updated : 15 Feb 2022 07:15 AM

முத்தலாக் தடைச் சட்டத்தால் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்: பிரதமர் மோடி

கான்பூர்: முத்தலாக் தடை சட்டத்தால் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆயிரக் கணக்கான முஸ்லிம் பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

உ.பி.யில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கான்பூர், கான்பூர் தேகத், ஜலான் மாவட்டங்களில் உள்ள 10 பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டு காலத் தில் உ.பி.யில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பாஜக முன்னெடுத்துள்ளது. இதனால் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. மக்கள் போற்றும் நல்லதிட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். பாஜகவுக்கு முந்தைய ஆட்சியின் போது உ.பி.யில் கலவரம், வன்முறைச் சம்பவங்கள் அதிகம் நடந்தன. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி இரவும் பகலும் கொள்ளையடித்தது.

அகிலேஷ் தலைமையிலான ஆட்சியில் இருந்தவர்கள் மாஃபி யாக்களுக்கு உதவி செய்தனர். இவர்கள் குடும்பத்தினருக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை விநியோகம் செய்தனர். அவர்கள் ஆட்சியில் தொடர்ந்து இருந் திருந்தால், மாநிலம் முழுவதும் மாஃபியாக்கள் வந்திருப்பார்கள்.

எனவே உங்கள் வாக்குகள் மீண்டும் மாஃபியா பிரச்சி னையைக் கொண்டு வர நினைப் பவர்களுக்கா அல்லது மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் பாஜகவுக்கா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். எனவே மக்கள் விழிப்புடன் இருந்து வளர்ச்சிக்கு உதவும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

2017-ம் ஆண்டுக்கு முன்பு தினந்தோறும் ரேஷன் கடைகளில் ஊழல் நடந்தது. லட்சக்கணக்கான போலி ரேஷன் அட்டைகள் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது. ஆனால் பாஜக அரசால் போலி ரேஷன் கார்டுகளுக்கும், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தற்போது கோடிக்கணக்கான மக்கள் ரேஷன் கடைகளில் இலவச மாக உணவு தானியங்களைப் பெறுகின்றனர். ஏழை சகோதரிகள், தாய்மார்கள் குழந்தைகளை பசியாற்றி வருகின்றனர்.

முஸ்லிம் பெண்களுக்கு உதவ பாஜக தலைமையிலான மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் மூலம் உ.பி.யில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் காப்பாற்றப் பட்டுள்ளனர். இந்தச் சட்டத்துக்கு முன்பு அவர்களின் திருமண வாழ்க்கை கேள்விக் குறியாக இருந்தது. இப்போது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக முஸ்லிம் பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் நல்ல நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x