Published : 22 Apr 2016 07:06 PM
Last Updated : 22 Apr 2016 07:06 PM

யூடியூப் பகிர்வு: இதுவும் இந்தியா.. லாத்தூரில் தண்ணீர் தண்ணீர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள லாத்தூர் வரலாறு காணாத வறட்சியில் கடுமையாக அவதியுற்று வருகிறது. நாம் நினைத்துப் பார்ப்பதைவிடவும் அங்கு நிலைமைகள் மோசமாக உள்ளது. | அது குறித்த 'தி இந்து' (ஆங்கிலம்) வீடியோ பதிவு கீழே |

சிறிதளவு தண்ணீரே உள்ள நீர்நிலையில் நெடுந்தொலைவு தங்கள் பானைகளுடன் குடிநீருக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலையில் மக்கள் துயரம் அடைந்துள்ளனர்.

மீரஜ்ஜிலிருந்து ஒரு லட்சம் லிட்டர் தண்ணீருடன் 2 ரயில்கள் லாத்தூருக்கு அனுப்பப்பட்டுள்ளன. நீராதாரம் இல்லாமல் சுமார் 50 நாட்களுக்கும் மேலாக லாத்தூர் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குடிநீருக்காக போராட்டம் வெடிக்கும் ஆபத்தை உணர்ந்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது நாளொன்றுக்கு 70 தண்ணீர் டேங்கர்களின் மூலம் 50 லட்சம் லிட்டர்கள் தண்ணீர் கிடைக்கப்பெற்று வருகிறது.

லாத்தூருக்கு தண்ணீர் ஆதாரமான மஞ்சாரா அணையில் கடந்த பிப்ரவை 25-ம் தேதி முதல் நீர் இல்லை. நாளொன்றுக்கு லாத்தூருக்கு மட்டும் 50 மில்லியன் லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது அதில் பாதிக்கும் குறைவாகவே பெற்று வருகிறது.

இதற்கிடையே, லாத்தூரிலிருந்து 417 கிமீ தூரத்தில் உள்ள மும்பையில் பணம் கொழிக்கும் ஐபிஎல் கிரிக்கெட் சர்ச்சை எழுந்தது. சுமார் 60 லட்சம் தண்ணீரைக் குடிக்கும் ஐபிஎல் போட்டிகள் மகாராஷ்டிராவிலிருந்து மாற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்வது மட்டுமே போதுமானதல்ல என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 15,747 கிராமங்கள் கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னமும் கோடையின் உச்சம் நெருங்காத நிலையில்...

இதுவும் இந்தியாவே... தண்ணீருக்குத் தவிக்கும் லாத்தூர்!