அல் பதர் தீவிரவாதிகள் 4 பேர், 3 கூட்டாளிகள் காஷ்மீரில் கைது

அல் பதர் தீவிரவாதிகள் 4 பேர், 3 கூட்டாளிகள் காஷ்மீரில் கைது
Updated on
1 min read

ஸ்ரீ நகர்: காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் ரபியாபாத் தாசி லுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாது காப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உள்ளூர் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் முற்றுகையிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ரவூச்சா கிராமத்தில் தீவிரவாதிகள் மறைந்திருந்த அல் பதர் தீவிரவாதிகள் 3 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் சோபூர் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் ரவூச்சா கிராமத்தைச் சேர்ந்த வரிஸ் தன்திரே, நவ்போராவைச் சேர்ந்த அமிர் சுல்தான் வானி, சோன்டிபோராவைச் சேர்ந்த தாரிக் அகமது பட் என்று அடை யாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் 3 பேரும் தடை செய்யப்பட்ட அல் பதர் இயக் கத்துக்காக பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வந்துள் ளனர். இவர்கள் அளித்த தகவல் களின் அடிப்படையில் மற்றொரு அல் பதர் தீவிரவாதி அஷ்ரப் நசீர் பட் மற்றும் அவர்களது 3 கூட்டாளிகளைப் பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய் தனர்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in