Published : 13 Feb 2022 09:15 AM
Last Updated : 13 Feb 2022 09:15 AM
கர்நாடகாவில் திருமண மேடையில் மணப்பெண் மயங்கி விழுந்து மூளைச் சாவு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் நிவாஸ்பூரைச் சேர்ந்தவர் சைத்ரா (26). இவருக்கு கடந்த வியாழக்கிழமை இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சைத்ரா மேடையில் மகிழ்ச்சியோடு மணமகனுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண் டிருந்தார். அப்போது சைத்ரா திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவர் மீது தண்ணீரை தெளித்து எழுப்ப முயன்றனர். அவர் கண் விழிக் காததால் கோலார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சைத்ராவை பரி சோதித்த மருத்துவர்கள் உடனடி யாக பெங்களூரு நிமான்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதனால் சைத்ராவின் குடும்பத்தினரும், மணமகனின் குடும்பத்தினரும் கதறி அழுதனர்.
இதையடுத்து சைத்ராவின் உடல் உறுப்புகளை தானம் செய்வ தாக பெற்றோர் அறிவித்தனர். இதற்கு கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகரும், ஏராளமான மருத்துவர்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுதாகர் கூறும்போது, ‘‘இதயத்தை நொறுக்கும் சோகத்திலும் சைத்ராவின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். அவர் களின் இந்த செயல் பல உயிர்களை வாழ வைக்கும். இந்த பெற்றோரின் செயல் பாராட்டுக்குரியது'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT