

மத்தியப் பிரதேசத்தில் ரயில் ஜன்ன லில் இளைஞர் ஒருவர் கட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவத்தில் 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.
சக பயணியின் குடிநீரை அனுமதி யின்றி எடுத்து அருந்தியதற்காக அந்த இளைஞர் தாக்கப்பட்டார். பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து மும்பை நோக்கி சென்ற ரயிலில், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் இடார்சி ரயில் நிலையங் களுக்கு இடையே இந்த கடந்த 25-ம் தேதி நடந்தது. அண்மையில் சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உதவி சப்-இன்ஸ்பெக் டர் ஒருவரை அரசு ரயில்வே போலீஸ் சஸ்பெண்ட் செய்துள்ளது. இது தவிர ரயில்வே பாதுகாப்பு படை தரப்பில் சப்-இன்ஸ்பெக்டர் அனில் ராய், கான்ஸ்டபிள் மதுசூதன் ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட் டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட விக்கி (24), ரவி (25), பல்ராம் (24) ஆகிய மூவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.