இந்தியா
சமாஜ்வாதி பிரமுகர் ஆசிரம வளாகத்தில் காணாமல் போன பெண் உடல் கண்டெடுப்பு
உன்னாவ்: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரது தாய் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்எல்ஏ பகதூர் சிங்கின் மகன் ரஜோல் சிங் தனது மகளை கடத்தியதாக பெண்ணின் தாயார் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
இந்நிலையில், பகதூர் சிங்குக்கு சொந்தமான ஆசிரம வளாகத்தில் இருந்து காணாமல் போன பெண்ணின் சடலம் நேற்று முன்தினம் காலை கண்டெடுக்கப்பட்டது. ஆசிரம வளாகத்தில் உள்ள காலி நிலத்தில் இருந்து பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இதையடுத்து பெண்ணின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் முன்னாள் எம்எல்ஏ மகன் ரஜோல் சிங்கை கைது செய்யபட்டுள்ளார்.
