'அவர் ஊழியர் அல்ல; எனது பார்ட்னர்' - தொழிலாளிக்கு பென்ஸ் கார் பரிசளித்த கேரள தொழிலதிபர்

'அவர் ஊழியர் அல்ல; எனது பார்ட்னர்' - தொழிலாளிக்கு பென்ஸ் கார் பரிசளித்த கேரள தொழிலதிபர்
Updated on
1 min read

கோழிக்கோடு: கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது தொழிலாளி ஒருவருக்கு விலைமதிப்பு மிக்க மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசளித்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.

கேரளாவில் மிகப்பெரிய டிஜிட்டல் ரீடெய்ல் ஸ்டோரான MyG குழுமத்தின் உரிமையாளர் ஏ.கே.ஷாஜி. இந்த நிறுவனத்தின் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் அனிஷ் என்பவர். கடந்த 22 வருடங்களாக அனிஷ், ஷாஜியிடம் பணிபுரிந்துவருகிறார். MyG நிறுவனத்தை தொடங்கியதில் இருந்து ஷாஜியுடன் பயணித்து வரும் அனிஷ், அந்த நிறுவனத்தில் மார்க்கெட்டிங், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரிவுகள் உட்பட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். இதனிடையே, சில தினங்கள் முன்பு அனிஷின் விசுவாசத்த்தை பாராட்டும் வகையில் அவரின் முதலாளி ஷாஜி, அவருக்கு உயர் ரகமெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கிளாஸ் 220 டி கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

காரை பரிசளித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ஷாஜி, "அன்புள்ள அனி... கடந்த 22 வருடங்களாக நீங்கள் எனக்கு ஒரு வலுவான தூணாக இருக்கிறீர்கள்" என்று நெகிழ்வாக பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான ஊடக பேட்டியின் போது, "அனிஷ் ஒரு ஊழியர் அல்ல. நாங்கள் இருவரும் பார்ட்னாட்கள்... நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது ஒரு பெருமையான தருணம். அனிஷ் கடந்த 22 வருடங்களாக என்னுடன் இருக்கிறார்" என்றும் ஷாஜி குறிப்பிட்டுள்ளார்.

தொழிலதிபர் ஷாஜி தனது ஊழியர்களின் விசுவாசத்திற்காக வெகுமதி அளிப்பது இது முதல் முறை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஷாஜி தனது ஆறு ஊழியர்களுக்கும் தலா ஒரு காரை பரிசாக அளித்து ஆச்சர்யப்படுத்தினார். இப்போது அனிஷ்க்கு அவர் கார் பரிசளித்துள்ள புகைப்படம் வைரலாக பரவிவருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in