

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் வரவு செலவு கணக்கு கள் குறித்த விவரங்களை ‘அசோசியேஷன் பார் டெமாக் ரக்டிக் ரிபார்ம்ஸ்’ (ஏடிஆர்) வெளி யிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய வாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய 5 கட்சிகளின் வருவாய் கடந்த ஓராண்டில் 39 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 2013 - 2014-ம் ஆண்டு இக்கட்சிகளின் வருவாய் ரூ.920 கோடியாக இருந்தது. அது 2014 -2015-ம் ஆண்டில் ரூ.1,275 கோடியாக அதிகரித்துள்ளது.
இவற்றில் பாஜகதான் அதிக வருவாய் பெற்ற கட்சியாக உள்ளது. கடந்த 2013-14-ல் ரூ.673 கோடியாக இருந்த பாஜகவின் வருவாய் 2014-2015-ம் ஆண்டில் 970 கோடியாக அதிகரித்துள்ளது.
பகுஜன் சமாஜ் ரூ.92 கோடி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ரூ.38 கோடி வருவாய் வந்துள் ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் மட்டும் ரூ.2.43 கோடி யில் இருந்து, ரூ.1.84 கோடியாகக் (2014 - 2015) குறைந்துள்ளது.