தமிழகத்தில் குறைந்து வருகிறது தாய் - சேய் இறப்பு விகிதம்: மத்திய அரசு தகவல்

பிரதிநிதித்துவப்படம்.
பிரதிநிதித்துவப்படம்.
Updated on
1 min read

புதுடெல்லி: தமிழகத்தில் தாய் - சேய் இறப்பு விகிதம் குறைந்து வருவதாக மத்திய அரசு புள்ளிவிவரத்துடன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துபூர்வமாக அளித்த

தேசிய அளவில்: இந்திய தலைமை பதிவாளரின் மாதிரி பதிவு அமைப்பு அறிக்கையின்படி, குழந்தை இறப்பு விகிதம் 2015-ல் 1000 பிறப்புகளுக்கு 37-ல் இருந்து 2019-ல் தேசிய அளவில் 1,000 பிறப்புகளுக்கு 30 ஆகக் குறைந்துள்ளது. இதில், தாய்மார்கள் இறப்பு விகிதம் 2015-17-ல் 8.1-ல் இருந்து 2016-18-ல் தேசிய அளவில் 7.3 ஆகக் குறைந்துள்ளது.

தமிழகத்தில்: தமிழகத்தைப் பொறுத்தவரை 2015-ல் 19 ஆக இருந்த 1000 பிறப்புகளுக்கான இறப்பு விகிதம், 2016-ல் 17 ஆகவும், 2017-ல் 16 ஆகவும், 2018-ல் 15 ஆகவும், 2019-ல் 15 ஆகவும் இருந்தது. தமிழகத்தில் 2015-17-ல் 4.8 ஆக இருந்த தாய்மார்கள் இறப்பு விகிதம், 2016-18-ல் 3.2 ஆக இருந்தது.

தேவையான திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு: தாய் சேய் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in