Published : 08 Feb 2022 06:12 AM
Last Updated : 08 Feb 2022 06:12 AM
மும்பை: இந்தியாவின் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானி ரூ.13.14 கோடியில் புதிதாக ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் காரில் இது கல்லினன் பெட்ரோல் மாடலாகும். இந்த கார் தெற்கு மும்பை வாகன போக்குவரத்து அலுவலகத்தில் ஜனவரி 31-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு வெளியான தகவலின்படி ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் மாடல் காரின் அடிப்படை விலை ரூ.6.95 கோடியாகும்.
12 சிலிண்டரைக் கொண்ட இந்தகாரின் எடை 2,500 கிலோாகும். இது 564 பிஹெச்பி திறனை வெளிப்படுத்தும். இதற்கு பிரத்யேக நம்பர் பிளேட் அளிக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு முறை செலுத்தத் தக்க வரியாக ரூ.20 லட்சத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செலுத்தியுள்ளது. அத்துடன் கூடுதலாக ரூ.40 ஆயிரம் தொகை சாலை பாதுகாப்பு வரியாக செலுத்தப்பட்டுள்ளது. பிரத்தேயக எண் பெறுவதற்கு ரூ.12 லட்சத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செலுத்தியுள்ளது. வாகனத்தின் எண் 0001 என்று முடிவடையும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT