

ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் நேற்று கூறியதாவது:
ஜேஎன்யூ மாணவரான முகமது முசின் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேரள மாநிலம் பட்டம்பி தொகுதியில் போட்டியிடுகிறார். சமீபத்தில் போலீஸார் என்னை கைது செய்தபோது அதை எதிர்த்து முசின் போராடினார். எனவே, அவருக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். அதேநேரம் முழு நேர அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை. ஆசிரியராக வேண்டும் என்பது எனது குறிக்கோள். இவ்வாறு கண்ணய்யா கூறினார்.