Published : 07 Feb 2022 07:22 AM
Last Updated : 07 Feb 2022 07:22 AM

மே 8-ல் பத்ரிநாத் கோயில் திறப்பு

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள கேதார்நாத் ஆலயம் (கோப்புப் படம்).

டேராடூன்: புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை வரும் மே 8-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் சார்தாம் என அழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய 4 புனித தலங்கள் உள்ளன. இந்தத் தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில் வரும் மே 8-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக பனிப்பொழிவு காரணமாக மழை, குளிர்காலங்களில் மூடப்படும் இந்தக் கோயில் கோடை காலத்தில் திறக்கப்படுவது வழக்கமாகும்.

இந்நிலையில் இங்கு வாழ்ந்து வந்த தேஹ்ரி அரசரின் ஜாதகப்படி கோயில் நடை திறக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு மே 8-ம் தேதி காலை 6.15 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.

கோயில் நடை திறப்பு விழா தேதியை பத்ரிநாத் கோயில் குருக்கள் ரவால் ஈஸ்வர் பிரசாத் நம்பூதி, ராஜேஷ் நம்பூதிரி, ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி தலைவர் அஜேந்திரா அஜய், துணைத் தலைவர் கிஷோர் பன்வர் ஆகியோர் நேற்று அறிவித்தனர்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x