Last Updated : 07 Feb, 2022 07:16 AM

 

Published : 07 Feb 2022 07:16 AM
Last Updated : 07 Feb 2022 07:16 AM

ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன் சிறப்பு மையம் பெங்களூருவில் திறப்பு

சுமார் 200 உயர் ரக கேமராக்கள் மத்தியில் கர்நாடகாவின் ஐடி, பிடி அமைச்சர் அஸ்வத் நாராயண்

பெங்களூரு: ஆசியாவின் மிகப்பெரிய அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான சிறப்பு மையம் பெங்களூருவில் திறக்கப்பட்டது.

கர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்கான மிகப்பெரிய சிறப்பு மையத்தை நேற்று முன்தினம் தகவல் தொழில்நுட்ப, உயிரி தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் அஸ்வத் நாராயணா பேசும்போது, '' அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் ஆசியாவிலே மிகப் பெரியது. கர்நாடக அரசு இதனை ரூ.40 கோடி செலவில் உருவாக்கியுள்ள‌து.

உலகளாவிய அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் சந்தையில் 10 சதவீதமான இடத்தை இந்தியா கைவசம் வைத்திருக்கிறது. வரும் 2027ம் ஆண்டில் இது 20 முதல் 25 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இந்த துறையில் கர்நாடகா பெரும் ஆற்றலைக் கொண்டு சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.

தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையமானது டிஜிட்டலில் ஆக்கப்பூர்வமான தொழில்கள் தொடங்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும். இந்த மையத்தில் விர்ச்சுவல் (மெய்நிகர்) ரியாலிட்டி, டிஜிட்டல் கம்ப்ரஷன், போட்டோகிராமெட்ரி, கல்வியின் கேமிஃபிகேஷன், நிகழ்நேர மெய்நிகர் உற்பத்தி, பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து தனித்துவமான படிப்புகளை வழங்கும் பள்ளியும் இடம்பெற்றுள்ளது.

இன்னும் ஓராண்டுக்குள் கர்நாடக அரசு புதிய அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் கொள்கையை கொண்டு வர உள்ளது. பிரத்யேக ‘டிஜிட்டல் மீடியா என்டர்டெயின்மென்ட் ஏரியா’ அமைக்க தேவையான நிலமும் ஓராண்டுக்குள் வழங்கப்படும். கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் வளாகங்களில் பல சிறிய சிறப்பு வசதி மையங்கள் திறக்கவும் வழிவகை செய்யப்படும்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x