மக்களிடம் பிரிவினையை தூண்டுகிறார் மோடி: அசாம் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புகார்

மக்களிடம் பிரிவினையை தூண்டுகிறார் மோடி: அசாம் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புகார்
Updated on
1 min read

“பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் இந்தியாவை பற்றி பெருமையாக பேசுகிறார், இங்கே வந்தவுடன் பிரிவினையை தூண்டி விடுகிறார். மதவாத சக்தி களிடம் அசாம் மக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார்.

அசாம் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட் டுள்ளனர். லோயர் அசாமின் பர்பேடா மாவட்டத்தில் உள்ள சருகேட்ரி பகுதியில் காங்கிரஸ் சார்பில் நேற்று பிரச்சார பொதுக் கூட்டம் நடந்தது. இதில் சோனியா காந்தி பேசியதாவது:

மக்களிடையே பிரதமர் மோடி பிரிவினையை தூண்டி வருகிறார். நாக்பூரில் இருந்து கொண்டு (ஆர்எஸ்எஸ்) மதவாத அரசியலை இயக்கி கொண்டிருக்கின்றனர். எனவே மதவாத பாஜக.விடம் அசாம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிநாடு செல்லும் போதெல்லாம் இந்தியாவை பற்றி பெருமையாக பேசுகிறார் பிரதமர் மோடி. ஆனால், சொந்த நாட்டுக்கு திரும்பியவுடன் மக்களிடம் வெறுப்பை பரப்புகிறார்.

அன்பு, அமைதி, மதநல்லிணக் கம் ஆகியவற்றில் இருந்து மக்களை பிரிக்க சதி நடக்கிறது. மதநல்லிணக்கத்துக்கு மிகச்சிறந்த உதாரணமாக அசாம் மாநிலம் உள்ளது. இங்குள்ள மக்கள் சங்கர தேவா மற்றும் ஆஸான் பகிர் போத னைகளை பின்பற்றி சுமுகமாக வாழ்கின்றனர். ஆனால், மோடியும் அவரது சகாக்களும் பொய் வாக் குறுதிகளை அளித்து மக்களிடம் பிரிவினையை தூண்ட முயற்சிக் கின்றனர்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அசாம் மாநிலம் பாதுகாப்பற்ற தாக, ஸ்திரமற்ற நிலையில் இருந் தது. ஆனால் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய் பொறுப்பேற்ற பின்னர் மாநிலத்தில் அமைதி திரும்பவும், வளர்ச்சிப் பாதையில் செல்லவும் கடினமாக உழைத் திருக்கிறார். கல்வி நிறுவனங்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகி உள்ளன.

அசாம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தருண் கோகோயும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர். அந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற, காங்கிரஸை ஆதரியுங்கள்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in