முதுநிலை நீட் 2022 தேர்வு 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு

முதுநிலை நீட் 2022 தேர்வு 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: மத்திய அரசு அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: முதுநிலை மாணவர்களுக்கான 2022 ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு 6 முதல் 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

நீட் 2021 கவுன்சலிங் தேதிகளுடம் தேர்வுத் தேதிகள் மோதுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நீட் முதுநிலை தேர்வு 2022ஐ ஒத்திவைக்க வேண்டும் என்று மருத்துவர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. மார்ச் 12, 2022ல் முதுநிலை நீட் எழுத்துத் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தேதியில் முதுநிலை நீட் 2021 கவுன்சிலிங் அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் தேர்வு தேதியை மாற்றும்படி கோரிக்கைகள் வாந்தன. இதனைக் கருத்தில் கொண்டு 6 முதல் 8 வாரங்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in