Published : 03 Feb 2022 07:44 AM
Last Updated : 03 Feb 2022 07:44 AM

ஒரு கதாபாத்திரத்துக்காக நாடகத்தை முடக்குவதா? - ஆந்திர அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

அமராவதி: ஆந்திராவில் கடந்த 1920-ல் கல்லகூரி நாராயணராவ் எழுதி, இயக்கிய சிந்தாமணி நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் பெண் சுதந்திரத்தை ஊக்குவிப்பதாகவும் இந்த நாடகம் இருந்தது. இதனால் இந்த நாடகத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நாடகம்கடந்த 100 ஆண்டுகளாக காலசூழ்நிலைக்கேற்ற சில மாற்றங்களுடன் அரங்கேறி வந்தது. கடந்த2020-ல் இந்த நாடகத்தின் நூற்றாண்டு விழாவும் நடைபெற்றது.

இந்த நாடகத்தில் சுப்பி செட்டி, சிந்தாமணி, பில்வ மங்களுடு, பவானி சங்கரம்,  ஹரி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் உள்ளன. இதில் சுப்பி செட்டி கதாபாத்திரத்தை மற்ற கதாபாத்திரங்கள் கிண்டல் செய்வது போல் நாடகம் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அந்த சமூகத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த நாடகத்துக்கு ஆந்திர அரசு கடந்த ஜனவரி 17-ம் தேதி தடை விதித்தது. இதற்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி. ரகுராம கிருஷ்ணம்ம நாயுடு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், “ஒரு கதாபாத்திரத்துக்காக ஒரு நாடகத்தை தடை செய்வது என்ன நியாயம்? சிந்தாமணி புத்தகத்தை அரசு தடை செய்ததா? இல்லையே. ஆதலால் நாடகத்துக்கு மட்டும்எதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்கள் என்பதை வரும் செவ்வாய்க்கிழமை தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x