Published : 03 Feb 2022 12:03 PM
Last Updated : 03 Feb 2022 12:03 PM

ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூரு வட்டாரத்தில் இந்துத்துவ அமைப்பினரின் எதிர்ப்பின் காரணமாக சில தனியார் கல்லூரிகள் முஸ்லிம் மாணவ, மாணவிகள் குல்லா,ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிய தடை விதித்துள்ளன.

இந்நிலையில் கடந்த டிசம்பரில் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு) அணிந்துவருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புதெரிவித்து உலக ஹிஜாப் தினமான நேற்று முன்தினம் 6 முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப்அணிந்து வந்தனர். அப்போது கல்லூரி நிர்வாகம் ஹிஜாபை கழற்றிவிட்டு வந்தால் மட்டுமேவகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவீர்கள் என எச்சரித்தது. இதனை ஏற்க மறுத்த மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது சில பேராசிரியர்கள் மாணவிகளை சந்தித்து, படிப்புக்காக ஹிஜாப் அணிவதை கைவிடுமாறு வலியுறுத்தினர். அதனை மாணவிகள் ஏற்க மறுத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x