‘ஆஹார்’ திட்டத்தின் கீழ் ரூ.5-க்கு சாப்பாடு: ஒடிசாவில் கூடுதலாக 100 மலிவு விலை உணவகங்கள் திறப்பு

‘ஆஹார்’ திட்டத்தின் கீழ் ரூ.5-க்கு சாப்பாடு: ஒடிசாவில் கூடுதலாக 100 மலிவு விலை உணவகங்கள் திறப்பு
Updated on
2 min read

ஒடிசாவில் மாநில அரசின் மலிவு விலை உணவகங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மேலும் 100 உணவங்களை முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் மலிவுவிலை உணவகங்கள் முதன்முதலில் திறக்கப் பட்டன. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மேலும் பல மாநிலங்கள் மலிவு விலை உணவகங்களை திறக்கத் தொடங்கின.

அந்த வகையில் ஒடிசாவில் ‘ஆஹார் (ஆகாரம்)’ என்ற மதிய உணவு திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அரிசி சாதமும், ‘தல்மா’ எனப்படும் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து ரூ.5-க்கு அளிக் கப்படுகிறது. இத்துடன் சுத்தமான குடிநீரும் பொதுமக்களுக்கு இல வசமாக விநியோகிக்கப்படுகிறது. ஒடிசாவின் புவனேஸ்வர், கட்டாக், ரூர்கேலா, பர்ஹாம்பூர், சம்பல்பூர் ஆகிய ஐந்து நகரங்களில் முதல் கட்டமாக 21 உணவகங்கள் தொடங் கப்பட்டன.

இவற்றுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கூடுதலாக 100 உணவகங்கள் ஒடிசாவின் 30 மாவட்டங்களிலும் தொடங்கப் பட்டுள்ளன. இவற்றை கட்டாக் நகரில் ஜவஹர்லால் நேரு அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார்.

இந்த உணவகங்களால் அரசுக்கு ஏற்படும் இழப்பை சமாளிக்க ஒடிசாவில் செயல்படும் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங் களிடம் இருந்து நிதியுதவி பெற முடிவு செய்யப்பட்டது. இது தொடர் பாக முதல்வர் நவீன் பட்நாயக் விடுத்த கோரிக்கையை அந் நிறுவனங்கள் ஏற்கவில்லை. இத் திட்டத்தினால் மாநில அரசுக்கே புகழ் கிடைக்கும், மத்திய அரசுக்கு கிடைக்காது என இந்நிறுவனங்கள் கருதியதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. என்றாலும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங் கள் மற்றும் இங்கு செயல்படும் தனியார் பெருநிறுவனங்கள், முதல்வரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நிதியுதவி அளித்து வருகின்றன.

தமிழகத்தை பின்பற்றி

தமிழக அரசின் திட்டம் ஒடிசாவில் அமல்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல. ஒடிசாவில் ரூ.1-க்கு கிலோ அரசி வழங்கும் திட்டம் சிறப் பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக திட்டத்தை பின்பற்றியே இத்திட்டம் அங்கு தொடங்கப் பட்டது.

இந்நிலையில் ரூ.1-க்கு கிலோ அரசி வழங்கும் திட்டம் மற்றும் மலிவுவிலை உணவக திட்டத்தால் ஒடிசாவை ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு பெருகியிருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கானாவில் ஹைதராபாத் மாநகராட்சி சார்பில் ரூ.5-க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் 2014 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் காங் கிரஸ் அரசால் கடந்த நவம்பரில் ‘இந்திரா அம்மா உணவகம்’ திறக் கப்பட்டு ரூ.20-க்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இதில் அரிசி சாதம், காய்கறி, தயிர், நெய், ராகி மற்றும் கோதுமை ரொட்டிகள் பரிமாறப்படுகின்றன.

ஆந்திர மாநிலத்தில் ‘அண்ணா உணவகம்’ என்ற பெயரில் மலிவு விலை உணவகம் திறக்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்ட மிட்டு வருகிறார். டெல்லியில் ‘ஆம் ஆத்மி உணவகம்’ என்ற பெயரில் மூன்று வேளையும் தொழிலாளர் களுக்கு உணவளிக்க திட்டமிடப் பட்டு வருகிறது.

இதுபோன்ற மலிவு விலை உணவகங்கள் திறப்பது குறித்து உ.பி., ராஜஸ்தான் அரசுகளும் பரிசீலித்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in