மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க மே.வங்கத்தில் சிறப்பு வசதிகள்

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க மே.வங்கத்தில் சிறப்பு வசதிகள்
Updated on
1 min read

ஆறு கட்டங்களாக நடைபெறும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மீது தேர்தல் ஆணையம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. வரிசையில் காத்திருக்கத் தேவை யில்லை, சக்கர நாற்காலிகள், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாக்குப்பதிவு இயந்திரம் என பல்வேறு வசதிகள் அவர்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.

துணை தலைமை தேர்தல் அலுவலர் அமித் ஜோதி பட்டாச்சார்யா இதுதொடர்பாகக் கூறியதாவது:

மாற்றுத் திறனாளி வாக்காளர் கள் தங்கள் வாக்குகளைத் தாங்களே பதிவு செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்குவதே எங்களின் கொள்கை. அவர்கள் வரிசையில் நிற்க வேண்டிய தில்லை. முன்னுரிமை அளிக்கப் படும்.

வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத் திறனாளி வாக்காளர் களை காத்திருக்க வைக்கக் கூடாது என தேர்தல் அலுவலர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் அவர் களை அடையாளம் கண்டுள் ளோம். எங்கெல்லாம் அதிக எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ள னரோ, அந்த வாக்குச் சாவடியில் கூடுதல் வசதிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

வாக்குச் சாவடிகளில் சக்கர நாற்காலிகள், தற்காலிக அல்லது நிரந்தர சாய்வுப்பாதைகள் அமைக்கப்படும். வாக்குப் பதிவு மையம் தரைத் தளத்தில் இல்லாமல் முதல் தளத்தில் இருந்தால், மாற்றுத் திறனாளிகள் உரிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும்.

பார்வையற்ற வாக்காளர் களும் மற்றவர்களைச் சார்ந் திருக்க வேண்டிய அவசியமின்றி, வாக்குப் பதிவு இயந்திரத்தில் பிரெய்லி குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

“சில இடங்களில் இந்த நடைமுறைகளை முழுமை யாக அமல்படுத்த முடிய வில்லை. வாக்குப் பதிவு இயந்திரம் உயரத்தில் வைக்கப் பட்டிருப்பதால், சக்கர நாற்காலி யில் இருக்கும் மாற்றுத் திறனாளி வாக்காளரால் வாக்களிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, அவர் மற்றவர்களின் உதவியை நாட வேண்டியுள்ளது. வாக்குப்பதிவின் ரகசியத்தை அவரால் காக்க முடியாது. இதுபோன்ற பிரச்சினைகளும் உள்ளன” என என்ஐபி தொண்டு நிறுவன செயலாளர் தேவஜோதி ராய் தெரிவித்துள்ளார்.

மேற்கு மிட்னாபூர் மாவட்ட நிர்வாகம், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு உதவ, ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் உதவியாளர்களை நியமித்துள்ளது. பார்வை யற்றோருக்கு உதவ அவர் களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in