பாரத் மாதாவுக்கு ஜே என முழங்குவதால் தண்ணீர் பிரச்சினை தீர்ந்து விடாது: பாஜக.வுக்கு சிவசேனா எச்சரிக்கை

பாரத் மாதாவுக்கு ஜே என முழங்குவதால் தண்ணீர் பிரச்சினை தீர்ந்து விடாது: பாஜக.வுக்கு சிவசேனா எச்சரிக்கை
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

தனது முதல்வர் பதவியைத் துறக்க நேரிட்டாலும், பாரத் மாதா வுக்கு ஜே என்ற கோஷத்தை விட மாட்டேன் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

அதற்குப்பதிலாக மாநிலத்தின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கா விட்டால் பதவியைத் துறப்பேன் என அவர் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அநீதிக்கு எதிராக சில இளைஞர்கள் மாவோயிஸத் தைப் பின்பற்றுகின்றனர். ஆனால், ஒரு வாய் குடிநீருக்காக இளைஞர் கள் ஆயுதமேந்தினால் என்னவா கும். பிறகு, பாரத்மாதாவுக்கு ஜே என்ற கோஷம் அர்த்தமற்றுப் போகும்.

குடிநீர் பிரச்சினைகளுக்காக முந்தைய அரசை இப்போது குறைகூறுவதில் அர்த்தமில்லை. இது உங்களுடைய அரசு. குடிமக் களை தாகத்தில் தவிக்கவிட்டு விட்டு, பாரத் மாதாவுக்கு ஜே என்றோ, வேறு சில தேசபக்தி வாசகங்களைக் கூறியோ அவர் களை உற்சாகப்படுத்த முடியும் என எதிர்பார்க்கக் கூடாது.

மராத்வாடா, வடக்கு மகாராஷ் டிராவின் சில பகுதிகளில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர் கள் கூடக்கூடாது என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகளுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாவல் போடப்பட் டுள்ளது. மக்கள் குடிநீருக்கு பூட்டுப் போட்டு வைத்துள்ளனர். நீர் மாபி யாக்கள் தலைதூக்கியுள்ளனர்.

அவுரங்காபாத் உள்ளிட்ட பகுதி களில் 40 நாட்களுக்கு ஒரு முறை நீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிக்க, சமைக்க, குளியல்/கழிப் பறை பயன்பாடுகளுக்கு தண்ணீர் இல்லை. கால்நடைகள் இறக்கின் றன. வயல்வெளிகள் சுடுகாடு போல காட்சியளிக்கின்றன.

தானே, புனே, நாக்பூர், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் நிலைமை மோசமடைந்து வரு கிறது. தொழிற்சாலைகள் மூடப்படு கின்றன. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. பாரத் மாதா வுக்கு ஜே என வெறுமனே கோஷமிடுவதும், தேசப்பற்று என்ற பெயரில் அரசியல் செய்வதும் மக்களின் தாகத்தைத் தீர்த்து விடாது.

முதல்வர் பதவியில் பட்னாவிஸ் தொடர வேண்டுமெனில், மகாராஷ்டிர மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.

இவ்வாறு சிவசேனா தெரிவித் துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in