பிரதமர் மோடியின் யூடியூப் சேனலுக்கு 1 கோடி ஃபாலோயர்ஸ்: உலகத் தலைவர்களில் மிக அதிகம்
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனலைப் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியாக அதிகரித்துள்ளது. உலகத் தலைவர்களிலேயே யாருக்கும் இந்த எண்ணிக்கையில் ஃபாலோயர்ஸ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா. இவரது யூடியூப் சேனலை 36 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். மூன்றாவதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோபஸ் உள்ளார். இவரை 30.7 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
இந்தப் பட்டியலில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ 28.8 லட்சம் ஃபாலோயர்ஸுடன் 4வது இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெறும் 7.03 லட்சம் பேர் மட்டுமே பின்தொடர்கின்றனர்.
பிரதமர் மோடியுடன் இந்தியத் தலைவர்களை ஒப்பிடுகையில் ராகுல் காந்திக்கு 5.25 லட்சம் ஃபாலோயர்ஸும், சசி தரூருக்கு 3.73 லட்சம் ஃபாலோயர்ஸும் உள்ளனர். ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஓவைஸிக்கு 3.78 லட்சம் ஃபாலோயர்ஸும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 2.12 லட்சம் ஃபாலோயர்ஸும் உள்ளனர்.
