‘‘முக்கிய சாதனை’’- 75% பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியது பற்றி பிரதமர் மோடி பெருமிதம்

‘‘முக்கிய சாதனை’’- 75% பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியது பற்றி பிரதமர் மோடி பெருமிதம்
Updated on
1 min read

புதுடெல்லி: வயது வந்தவர்களில் 75%_க்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பது பற்றி பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் வயது வந்தவர்களில் 75%க்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதாவது இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்ட்ர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டரையடுத்து பிரதமர் கூறியிருப்பதாவது;

‘‘வயது வந்த 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த முக்கியமான சாதனைக்காக நமது குடிமக்களுக்கு வாழ்த்துக்கள்.

நமது தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக மாற்றிய அனைவர் குறித்தும் பெருமிதம் கொள்கிறேன். ’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in