Published : 30 Jan 2022 05:16 AM
Last Updated : 30 Jan 2022 05:16 AM
எதிர்வரும் நிதி ஆண்டுக்கான (2022-23) பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (ஜன 31) தொடங்குகிறது.
தொடக்க நாளன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றுவார்.
முதல் நாளன்று குடியரசுத் தலைவர் உரை மட்டுமே இடம்பெறும். அதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். பின்னர் பிப்ரவரி 1-ம் தேதி 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பிப்ரவரி 2-ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். இறுதியில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறும்.
புதிய திட்டங்கள் இடம்பெறும்
கடந்த ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்திய சாதனைகள் அனைத்தும் முக்கியமாக குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெறும். அத்துடன் வரும் நிதி ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த விவரங்களும் அவரது உரையில் இடம்பெறும்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும். இதைத் தொடர்ந்து ஒரு மாத காலம் நாடாளுமன்றத்துக்கு விடுமுறையாகும். அடுத்த கட்ட கூட்டம் மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும்.
நடத்தை வரையறை வெளியீடு
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் உறுப்பினர்கள் கூட்டத் தொடரில் நடந்துகொள்வது குறித்த விதிமுறைகளை மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
மாநிலங்களவையின் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு இதை வெளியிட்டுள்ளார். உறுப்பினர்களின் நடத்தை குறித்த குழுவின் அறிக்கை மார்ச் 14, 2005-ல் வெளியிடப்பட்டது. அது ஏப்ரல் 20, 2005-ல் ஏற்கப்பட்டது. இதில் உறுப்பினர்கள் அவை மரபைக் காக்கும் வகையில் எவ்விதம் செயல்பட வேண்டும் என்ற விதிமுறைகள் வகுக்கப்பட் டுள்ளன.
இதில் குறிப்பிட்டுள்ளபடி உறுப்பினர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து அவை விதிகளுக் குட்பட்டு செயல்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவை மாண்பை குலைக்கும் வகையிலான செயலில் உறுப்பினர்கள் ஈடுபடக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்படும்.
பூஜ்ய நேரம் கிடையாது
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் 31-ம் தேதியும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பிப்ரவரி 1-ம் தேதியும் கேள்வி நேரம் மற்றும் கேள்வி அல்லாத பூஜ்ய நேரமும் கிடையாது என நாடாளுமன்ற செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி. 17-வது மக்களவை கூட்டத்தொடரின் கூட்டுக் கூட்டத் தின் முதல் நாள் மற்றும் அதற்கடுத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் பூஜ்ய நேரம் மற்றும் கேள்வி நேரம் கிடையாது என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மிகவும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்த கேள்விகளை பிப்ரவரி 2-ம் தேதி உறுப்பினர்கள் எழுப்பலாம் என்றும் குறிப்பிடப்பட் டுள்ளது. எழுப்ப உள்ள பிரச் சினைகள் குறித்த விவரங்களை நாடாளுமன்ற அலுவலகத்தில் பிப்ரவரி 1-ம் தேதிக்குள் தாக் கல் செய்யலாம் என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நடைமுறையின் படி கேள்வி நேரம் மற்றும் பூஜ்ய நேரம் தினசரி 60 நிமிடம் நடைபெறும். மக்களவையில் கேள்வி நேரத்துடன் அலுவல் தொடங்கும். மாநிலங்களவையில் 11 மணிக்கு பூஜ்ய நேரமும் அதைத் தொடர்ந்து கேள்வி நேரமும் தொடங்குவது நடைமுறையாக உள்ளது.
காகிதம் அல்லாத பட்ஜெட்
இம்முறை டிஜிட்டல் பட்ஜெட் டாக தாக்கல் செய்யப்படுகிறது. காகித உபயோகத்தைக் குறைக் கும் பொருட்டு டிஜிட்டல் ஆவணமாக பட்ஜெட் உரை உறுப்பினர் களுக்கு அளிக்கப்படும். முழு வதும் டிஜிட்டல் முறையிலான இந்த பட்ஜெட் காகிதம் அல் லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT