

கரோனா பரவல் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங் கானாவிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இரு மாநிலங்களிலும் பல தேர்வுகள் ரத்து செய்யப் பட்டன. தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க இரு மாநில அரசுகளும் முடிவு செய்துள்ளன.
தெலங்கானா மாநில கல்வித் துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி நேற்று ஹைதராபாத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, “தெலங்கானாவில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கண் டிப்புடன் பின்பற்றப்படும். இதற்கு பெற்றோர்களும் மாணவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வகுப்பறைகளில் மாணவர்கள் முகக் கசவம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்” என்றார்.
தெலுங்கானாவை போன்று ஆந்திராவிலும் பிப்ரிவரி 1-ம் தேதி முதல் கரோனா பாதுகாப்பு விதிகளுடன் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.