பார்க்கப் பார்க்கப் பரவசம்... 1000 ட்ரோன்களால் மின்னிய இந்தியாவின் அடையாளங்கள் - படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி புகைப்படத் தொகுப்பு

படங்கள்: ஆர்.வி.மூர்த்தி
படங்கள்: ஆர்.வி.மூர்த்தி
Updated on
3 min read

டெல்லியில் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் வகையில் நடந்தது. இந்த ஆண்டின் பாசறை திரும்புதல் நிகழ்ச்சியில் இடம்பெற்ற புதுமையான ட்ரோன் காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. (புகைப்படங்கள் கீழே)

அது என்ன படைகள் திரும்புதல்? போர்க்களத்திலிருந்து சூரிய அஸ்தமன நேரத்தில் படைகள் பாசறைக்கு திரும்பும் நூற்றாண்டு பழமையான பாரம்பரிய நிகழ்ச்சியாக பாசறை திரும்புதல் நடைபெற்றது. ஊதுகுழல்கள் ஊதப்பட்டதும் படைகள் சண்டையை நிறுத்தி தங்கள் ஆயுதங்களை உறையிலிட்டு போர்க்களத்தை விட்டு திரும்புவது வழக்கமாகும். இந்த வழக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் குடியரசுத் தினவிழா நிறைவுறும் நாளில் படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டு காலத்தை விடுதலையின் அமிர்த பெருவிழாவாக இம்முறை கொண்டாடப்படுகிறது. ஆகையால் புதுமையான ட்ரோன் காட்சிகள் அரங்கேற்றப்பட்டன.

10 நிமிடங்கள் 1000 ட்ரோன்கள்: ட்ரோன் காட்சிகள் மேக் இன் இந்தியா முன்முயற்சியின் கீழ் கருத்துருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டிருந்தது. சுமார் 10 நிமிடங்கள் நடந்த ட்ரோன் கண்காட்சியில் 1000 ட்ரோன்கள் பங்கேற்றன.

குடியரசுத் தலைவர் தலைமை: தலைநகர் டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க விஜய் சவுக்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆயுதப் படைகளின் சுப்ரீம் கமாண்டரான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சிறப்பு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினர் பங்கேற்கும் மொத்தம் 26 பாண்ட் இசை அணிவகுப்புகள் பார்வையாளர்களை பரவசப்படுத்து முதல் பாண்ட் இசையாக ‘வீர் சைனிக்’ இசைக்க தொடர்ந்து, பைப்ஸ் & டிரம்ஸ் பாண்ட், சிஏபிஎஃப் பாண்ட், விமானப்படை பாண்ட், கடற்படை பாண்ட், ராணுவ பாண்ட் ஆகியவை இசைக்க மக்கள் வீரம் பாய நிகழ்ச்சியை ரசித்தனர்.

மேரே வட்டான்கே லோகான்: தேசபக்தியைப் பாய்ச்சும் கேரளா, ஹிந்த் கி சேனா, ஆ மேரே வட்டான்கே லோகான் ஆகிய புதிய மெட்டுக்கள் இசைக்கப்பட்டன. மிகவும் பிரபலமான மெட்டான “சாரே ஜகான் சே அச்சா“ என்ற மெட்டுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in