

டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் உயரதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணியாற்றுவோர் அளிக்கும் தகவ லின் அடிப்படையில் செயல்படு வது உண்டு. இதனால், பொது மக்களின் பிரச்சினைகளை உயரதி காரிகள் நேரடியாக அறிய முடிவ தில்லை. இந்தக் குறைபாட்டை சரிசெய்வதுடன் துறைகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு யோசனை செய்துள்ளார். இதன் படி பல்வேறு துறைகளில் நன்கு படித்த பட்டதாரி இளைஞர்களை கவுரவப் பதவியில் அமர்த்த அவர் திட்டமிட்டுள்ளார். குறைந்தது ஓர் ஆண்டு காலத்துக்கான இந்தப் பணிக்கு மாத உதவித்தொகையாக ரூ. 1.25 லட்சம் அளிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி அரசு அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “சமீபத்தில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தலைமையிலான உயர்நிலைக் குழு கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கேஜ்ரி வாலின் கனவுத் திட்டமான இதன் மீது நிதி, திட்டம் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கும்படி கேட்டுள்ளோம். ஆலோசனைகள் பெற்றபின் இத் திட்டம் அமைச்சரவைக் கூட்டத் தில் வைக்கப்பட்டு அனுமதி பெறப்படும்” என்று தெரிவித்தனர்.
முதல்கட்டமாக 30 இளைஞர் களை தேர்வு செய்ய திட்டமிடப் பட்டுள்ள நிலையில், இவர்களுக் கான குறைந்தபட்ச கல்வித்தகுதி இளநிலை பட்டமாக இருக்கும். என்றாலும் முதுநிலை மற்றும் சிறப்பு தொழில் கல்விப் பயின்ற வர்களுக்கு முன்னுரிமை வழங்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இளைஞர்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் உயரதிகாரிகளுக்கு அடித்தட்டு மக்களின் கருத்து களை கொண்டுவந்து சேர்க்க உள்ளனர். இத்துடன் அரசு இயந்திரத்தின் பணியை சுலப மாக்குவதுடன், காலத்தையும் சேமிக்கும் வகையில் புதிய யோசனைகளை அளிப்பார்கள். ஆம் ஆத்மி அரசின் திட்டங்களுக் கான பொதுமக்கள் கருத்துகளை யும் தொகுத்து வழங்குவார்கள். ஏற்கெனவே அரசு அதிகாரி களிடம் இருந்து பெறப்படும் கருத்து களுடன் இந்த இளைஞர்கள் அளிக்கும் கருத்துகள் கேஜ்ரிவால் அரசுக்கு கூடுதல் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.
இதுபோல், பட்டதாரி இளைஞர் களை மாநில அரசின் கவுரவப் பதவிகளில் குஜராத் மற்றும் மகாராஷ்டிர அரசுகள் பயன் படுத்தி வருகின்றன. ஆனால் அங்கு அவர்களுக்கு ரூ. 20,000 மட்டுமே மாத உதவித் தொகையாக வழங்கப் படுகிறது. இந்த திட்டத்தையே கேஜ்ரிவால் அரசு நவீனப்படுத்தி அதிக உதவித்தொகை அளிக்க முடிவு செய்துள்ளது.