Published : 12 Apr 2016 08:47 AM
Last Updated : 12 Apr 2016 08:47 AM

விவாகரத்து வழக்கின்போது நீதிமன்றத்தில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்

விவாகரத்து வழக்கு தொடர்பாக ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜரான ஒருவர், நீதிமன்ற வளா கத்திலேயே தனது மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அந்தப் பெண் ஆபத் தான நிலையில் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹைதராபாத் லங்கர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த நாகேந்திர பாபுவுக்கும் சவுஜன்யாவுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான். நாகேந்திர பாபு வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி சவுஜன்யா கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு விவாகரத்து கோரி ராஜேந்திர நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மேலும் தனக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனால் நாகேந்திர பாபுவும் சவுஜன்யாவும் நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜராயினர். வழக்கு விசாரணை முடிந்த பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தனர். அப்போது நாகேந்திர பாபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென தனது மனைவியின் கழுத்தை அறுத்து விட்டு அங் கிருந்து தப்பி ஓடி விட்டார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சவுஜன்யாவை அங் கிருந்த போலீஸார் உடனடியாக ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. ஆனால் அவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ராஜேந்திர நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகி உள்ள கணவர் நாகேந்திர பாபுவை தேடி வருகின்றனர். நீதிமன்ற வளாகத் தில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x