எல்லா கோயில்களிலும் பெண்கள் வழிபாடு செய்வது அடிப்படை உரிமை: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

எல்லா கோயில்களிலும் பெண்கள் வழிபாடு செய்வது அடிப்படை உரிமை: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்தில் அனைத்துக் கோயில்களிலும் பெண்களும் நுழைந்து பிரார்த்தனை செய்யலாம் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயிலில் நுழைந்து வழிபடுவது பெண்களின் அடிப்படை உரிமை என தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவர்களைத் தடுத்தால் 6 மாதம் சிறை தண்டனை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டம் சனி சிங்னாபூர் கோயிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதி இல்லை. இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஹெச். வகேலா, நீதிபதி எம்.எஸ். சோனக் ஆகியோரடங்கிய அமர்வு “ஆண் ஒரு சிலைக்கு முன் பிரார்த்தனை செய்ய முடியும் என்றால் பெண்கள் ஏன் செல்லக்கூடாது. ஆண்களை அனுமதித்தால், பெண்களையும் அனுமதிக்க வேண்டும். பெண்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுத் தால் அவர்கள் மகாராஷ்டிர இந்து வழிபாட்டுத் தல சட்டம் 1956-ன் படி 6 மாதம் சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். இதுதொடர் பாக ஏப்ரல் 1-ம் தேதி மாநில அரசு அறிக்கை அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த மும்பை நீதிமன்றம், மகாராஷ்டிரத் தில் அனைத்துக் கோயில்களுக் குள்ளும் பெண்கள் நுழையலாம். இது பெண்களின் அடிப்படை உரிமை. இந்த உரிமையைப் பாது காப்பது அரசின் கடமை என தீர்ப்பளித்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்குவதாக தெரிவித்துள்ள மகாராஷ்டிர அரசு, அதுதொடர்பான சட்டத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

“இது அனைத்து பெண்கள் மற்றும் அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி” என செயல்பாட் டாளர் திருப்தி தேசாய் தெரிவித் துள்ளார். அவர் இன்று அகமது நகர் சனி கோயிலுக்குள் நுழைய வுள்ளார்.

அண்மையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “இந்திய கலாச்சாரமும், இந்து மதமும் பெண்களுக்கு வழிபாட்டு உரி மையை எப்போதும் கொடுத்து வந்துள்ளன” என தெரிவித்திருந் தார்.

“நீதிமன்றம் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது. 21-ம் நூற்றாண்டில், ஆண்களும் பெண் களும் சமமாக நடத்தப்பட வேண் டும்” என தெரிவித்துள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோயி லில் பெண்கள் நுழைவதற்கு அனு மதிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in