Published : 28 Jan 2022 07:00 AM
Last Updated : 28 Jan 2022 07:00 AM

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தேர்தலை தள்ளிவைக்க 55% பேர் ஆதரவு

புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக 5 மாநிலங்களிலும் பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் லோக்கல் சர்க்கிள்ஸ் அமைப்பு சார்பில் 5 மாநிலங்களிலும் அண்மையில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 55 சதவீதம் பேர் சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும் என்று 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். 4 சதவீதம் பேர் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை.

தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறியோரில் 30 சதவீதம் பேர், குறைந்தபட்சம் 2 மாதங்களுக்குப் பிறகு தேர்தலை நடத்தலாம் என்றும் 25 சதவீதம் 4 மாதங்களுக்குப் பிறகு தேர்தலை நடத்தலாம் என்றும் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x