டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு ரத்து

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு ரத்து
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதையடுத்து, வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இப்போது டெல்லியில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், ‘‘டெல்லி நகரில் கரோனா தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தினசரி பாதிப்பு 10 சதவீதத்துக்கு கீழ் உள்ளது’’ என்று தெரிவித்தார்.

கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊர டங்கை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா நிலவரம் குறித்து ஆளுநர் அனில் பைஜால் மற்றும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இடையே நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. எனினும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு தொடரும்.

டெல்லி அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசு அலுவலகங் கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். திரையரங்குகள், பார் கள், உணவகங்கள் 50 சதவீதம் பேருடன் செயல்படலாம். திருமண விழாக்களில் 200 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். இன்றைய கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை’’ என்றார்.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in