நடிகை தற்கொலை வழக்கில் காதலர் ராகுல் ராஜ் தரப்பு வழக்கறிஞர் விலகினார்

நடிகை தற்கொலை வழக்கில் காதலர் ராகுல் ராஜ் தரப்பு வழக்கறிஞர் விலகினார்
Updated on
1 min read

டிவி நடிகை பிரதியுஷா தற் கொலை செய்து கொண்ட விவ காரத்தில், அவரின் காதலர் ராகுல் ராஜ் சிங் தரப்பு வழக்கறிஞர், வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் தரப்பு வழக்கறிஞர் நீரஜ் குப்தா கூறும் போது, “இந்த வழக்கில் வாதிடக் கூடாது என நான் கருதினேன். எனவே, விலகி னேன். இதனால், யாருக்கும் நீதி மறுக்கப்படாது. சரியோ தவறோ, நல்லதோ கெட்டதோ, ஒரு வழக்கறிஞருக்கு அவரின் கட்சிக் காரர் அனைத்துத் தகவலையும் தெரிவிக்க வேண்டும். ஆனால், எனக்கு எல்லாமே மறைக்கப் பட்டது. ஊடகங்களிடமிருந்துதான் நான் சில தகவல்களைத் தெரிந்து கொண்டேன்” என்றார்.

தொலைக்காட்சித் தொடர் களில் நடித்து வந்த பிரதியுஷா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரின் காதலர் ராகுல் தற்போது மருத்துவமனையில் உள்ளார். பிரதியுஷாவின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in