Published : 27 Jan 2022 07:32 AM
Last Updated : 27 Jan 2022 07:32 AM
புதுடெல்லி: நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இவை நடனங்கள், விளையாட்டுத் திறன், பல்லுயிர் பெருக்கம், சுதந்திரப் போராட்டம், மதம் சார்ந்த இடங்கள், வளர்ச்சி ஆகியற்றை சிறப்பிக்கும் வகையில் அமைந்திருந்தன.
இவை தவிர மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 9 ஊர்திகளும் ஆயுதப் படைகள் மற்றும் டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) சார்பில் 3 ஊர்திகளும் இடம்பெற்றன.
கடற்படையின் அலங்கார ஊர்தி இரண்டு முக்கிய கருப்பொருளை சித்தரித்தது. முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கும் 1946-ம் ஆண்டு கடற்படை எழுச்சி. 2-வது, ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் கடற்படை உருவாக்கும் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலை சித்தரித்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக 1971-ல் நடந்த போரில் கிடைத்த வெற்றிக்கு. விமானப் படை ஊர்தியில் மரியாதை செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT