ப்ரீத்தி ஜிந்தா விவகாரம்: நெஸ் வாடியா தந்தைக்கு போலீஸ் பாதுகாப்பு

ப்ரீத்தி ஜிந்தா விவகாரம்: நெஸ் வாடியா தந்தைக்கு போலீஸ் பாதுகாப்பு
Updated on
1 min read

ப்ரீத்தி ஜிந்தாவிடமிருந்து நிழல் உலக தாதா மூலம் அச்சுறுத்தல் வருவதாக புகார் வந்ததை அடுத்து, நெஸ் வாடியாவின் தந்தை நுஸ்லி வாடியாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ப்ரீத்தி ஜிந்தா விவகாரத்தில், நிழல் உலக தாதாவிடம் இருந்து தங்களுக்கு செல்போனில் மிரட்டல் விடுக்கப்பட்டதாக, வாடியா குழுமம் போலீஸில் புகார் அளித்தது. இதன் காரணமாக நெஸ் வாடியாவிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புகார் தொடர்பாக மும்பை காவல் ஆணையர் ராகேத் மரியா கூறும்போது, "அடையாளம் தெரியாத இரண்டு நிழல் உலக தாதாக்கள் மீது மிரட்டல் மற்றும் குற்றச் செயல் பிரிவில் மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

வாடியா குழும செயலாளர்களுக்கு வந்த தொலைப்பேசி மரட்டல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஆதாரத்தை வாடியா தரப்பினரின் சார்பில் போலீஸில் வழங்கப்பட்டுள்ளது.

இதனை வைத்து, வாடியாவின் செயலாளர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம்த்தையும், அதில் பதிவாகிய குரல்களோடு ஒப்பிட திட்டமிட்டுள்ளோம்.

குற்றம் நடந்ததாக கூறப்படும் நாளில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது, பணிபுரிந்த ஊழியர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் கேட்டுள்ளோம்.

அன்றைய தினம் ப்ரீத்தி, நெஸ் வாடியா ஆகியோர் அமர்ந்திருந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வழங்குபடி சோனி நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். இவை அனைத்தையும் பெற்ற பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

ப்ரீத்தி ஜிந்தாவும், தனது தரப்பு வாக்குமூலத்தை இந்த வாரத்தில் போலீஸிடம் அளிப்பார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

பங்குகள் விற்பனையா?

இந்த நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா, தனது பங்குகள் அனைத்தையும் விற்கபோவதாகவும். அதன் பின்னர் வெளிநாட்டில் குடியேற உள்ளதாகவும் வந்த தகவல்களை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

முமபையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்," நான் எனது பங்குகள் எதையும் விற்கவில்லை. அமெரிக்காவில் குடியேறும் திட்டம் எதுவும் இல்லை. மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in