

பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைக்குமானால் மூன்று ஆண்டுகளில் தனி புந்தேல்கண்ட் மாநிலம் உருவாக்கப்படும் என பாஜக மூத்த தலைவர் உமாபாரதி வாக்குறுதி அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் மேலும் கூறுகையில், “தனி புந்தேல்கண்ட் மாநிலத்தை நான் ஆதரிக்கிறேன். பாஜக ஆட்சிக்கு வந்தால் மூன்றாண்டுகளில் புந்தேல் கண்ட் மாநிலம் உருவாக்கப்படும்.
உத்தரப்பிரதேசத்துக்கு திட்டக் கமிஷனால் அறிவிக்கப்பட்ட வறட்சி நிதி எங்கு போனது என்பதையும் நாங்கள் கவனிப்போம். என் வாழ்நாளிலேயே அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்” என்றார் அவர்.