Published : 26 Jan 2022 07:07 AM
Last Updated : 26 Jan 2022 07:07 AM

ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கும்போதே உறுப்பு தானம் தேர்வு செய்யலாம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக் கும்போதே சம்பந்தப்பட்ட நபர், உறுப்பு தானத்தையும் தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

தற்போது ஓட்டுநர் உரிமத்துக்கான விண்ணப்பப் படிவங்களில், ஒருவர் தனது உறுப்புகளையும் தானம் செய்யலாம் என்ற புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. ஒருவேளை சாலை விபத்தில் அவர்உயிர் இழக்கும்போது அவரதுஉறுப்புகளை தானம் செய்யமுன்வருவதற்கான உறுதிச்சான் றாகும் இது.

இதற்காக மத்திய மோட்டார்வாகனச் சட்டத்தில் தேவையான திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது நாடு சுதந்திரமடைந்து 75-வது ஆண்டைக் கொண்டாடும் அம்ருத் மகோத்சவ் விழாவையொட்டி உறுப்பு தானத்தையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத் திருத்தம் 2018-ம் ஆண்டிலேயே கொண்டு வரப்பட்டது.

புதிதாக ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிப்பவர்கள், பழகுநர் உரிமம் பெறுபவர்கள், உரிமம் புதுப்பிப்பவர்கள் உள்ளிட்டோர் இந்த உறுப்பு தானத்தையும் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x