Published : 26 Jan 2022 07:00 AM
Last Updated : 26 Jan 2022 07:00 AM

நாட்டில் பெண் வாக்காளர் எண்ணிக்கை 5.1% உயர்வு

புதுடெல்லி: தேசிய வாக்காளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறியதாவது:

கடந்த 2019-ல் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர் எண்ணிக்கை 91.2 கோடியாக இருந்தது. இது இப்போது 4.3% அதிகரித்து 95.1 கோடியாகி உள்ளது. வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பில் ஆண்களை விட பெண்கள் முன்னணியில் உள்ளனர். 2019-ல் 43.8 கோடியாக இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை இப்போது 5.1% அதிகரித்து 46.1 கோடியாகி உள்ளது. அதேநேரம் 3 ஆண்டுகளுக்கு முன்பு 47.3 கோடியாக இருந்த ஆண் வாக்காளர் எண்ணிக்கை 3.6% அதிகரித்து 49 கோடியாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x