‘‘கோழைகளால் எதிர்த்துப் போராட முடியாது’’- ஆர்பிஎன் சிங் மீது காங்கிரஸ் கடும் சாடல்

‘‘கோழைகளால் எதிர்த்துப் போராட முடியாது’’- ஆர்பிஎன் சிங் மீது காங்கிரஸ் கடும் சாடல்
Updated on
1 min read

புதுடெல்லி: ஆர்பிஎன் சிங் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, கோழைகளால் எதிர்த்துப் போராட முடியாது என்று காட்டமாக விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்பிஎன் சிங் இன்று அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘ இது எனது புதிய தொடக்கம். பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தலைமையின் கீழும், வழிகாட்டுதலின்படியும் நாட்டை கட்டமைக்கும் பணியில் நானும் பங்கு கொள்கிறேன்.

நாடு இன்று நமது குடியரசு தினத்தை கொண்டாடும் நேரத்தில் இருக்கிறது. இந்த சமயத்தில் எனது அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறேன். ஜெய் ஹிந்த்’’ என தெரிவித்து உள்ளார்.

ஆர்பிஎன் சிங் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறித்து பிரியங்கா காந்தியின் கருத்து பற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “காங்கிரஸ் கட்சி போராடும். போராடினால் மட்டுமே போரை துணிச்சலுடன் மட்டுமே எதிர்கொள்ள முடியும். அதற்கு தைரியம், வலிமை தேவை, கோழைகளால் அதை எதிர்த்துப் போராட முடியாது என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்’’

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in