Published : 25 Jan 2022 07:43 AM
Last Updated : 25 Jan 2022 07:43 AM

குழந்தைகளுக்கான திருத்தப்பட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி: குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கான திருத்தப்பட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு

ள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களாக தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால்பாதிக்கப்பட்டு மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது நாட்டில் 3-வது கரோனா வைரஸ் அலையாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர். மேலும், மூன்றாம் அலையில் அதிக அளவில் சிறார்கள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கான திருத்தப்பட்ட புதிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறை தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக் கவசம் தேவையில்லை. மேலும், 6 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் நேரடி மேற்பார்வையில் முகக் கவசம் அணியலாம். 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், பெரியவர்களைப் போல முகக் கவசம் அணிய வேண்டும்.

அறிகுறியற்ற, லேசான பாதிப்புகளுக்கு சிகிச்சை அல்லது நோய் தடுப்புக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (ஆன்டிபயாடிக்ஸ்) மருத்துவர்கள் பரிந்துரைக்கக் கூடாது.

மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்தம்உறைதல் ஏற்படும் அபாயத்தைக்கண்காணிக்க வேண்டும். லேசானதொற்றில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழக்கமான குழந்தை பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் உளவியல் ஆலோசனையை வழங்க வேண்டும்

மற்ற நாடுகளில் ஏற்பட்ட கரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஒமைக்ரான் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.

நமது அரசுக்குக் கிடைத்த தகவலின்படி தற்போது ஒமைக்ரான் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசியமான தேவைகள் இருக்கும் பட்சத்தில் ஆன்டிபயாடிக்ஸ், ஆன்டிமைக்ரோபயல்ஸ் மருந்துகளை கொடுக்கலாம்.

ஸ்டெராய்டுமைல்ட் அல்லது அறிகுறிகள் அற்ற கேஸ்களுக்கு ஸ்டெராய்டு மருந்துகளை கொடுக்கக் கூடாது. இது ஆபத்தை ஏற்படுத்தலாம். அதே சமயம் மருத்துவமனையில் தீவிரமான கரோனாவோடு அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு கண்காணிப்புக்கு பின்புதான் ஸ்டெராய்டு மருந்துகளை கொடுக்க வேண்டும்.

சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான காலகட்டத் துக்கு மட்டுமே ஸ்டெராய்டு மருந் துகளை கொடுக்க வேண்டும்.

தீவிர நோயாளிகளுக்கு 5-7 நாட்களுக்கு ஸ்டெராய்டு மருந்துகளை கொடுக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x