Published : 24 Jan 2022 07:38 AM
Last Updated : 24 Jan 2022 07:38 AM

வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசும் முஸ்லிம் தலைவர்களை கைது செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள் மனு தாக்கல்

புதுடெல்லி: “இந்துக்களுக்கு எதிராக வெறுப் புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் முஸ்லிம் தலைவர்களை கைது செய்ய வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

டெல்லி மற்றும் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இந்து மத மாநாடு அண்மையில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட இந்து மதத் தலைவர்கள்சிலர், முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக, நாட்டை பாதுகாக்க வேண்டுமெனில், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை ஒடுக்க செய்ய வேண்டும் என்று சிலர் பேசியது நாடு முழுவதும்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத் தியது.

இதையடுத்து, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக வெறுப் புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர் குர்பான் அலி மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை சில தினங்களுக்கு முன்பு விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு உத்தராகண்ட் அரசுக்கும், டெல்லி அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதன்பேரில், அந்த மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இந்து மதத் தலைவர்கள் இருவரை போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர் மனு தாக்கல்

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட மனுவுக்கு எதிராக இந்து சேனா மற்றும் இந்துக்களுக்கான நீதிஅமைப்பு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சுகளைஆராய உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில், இந்துக்களுக்கு எதிராக பேசப்படும் வெறுப்பு பேச்சுகளையும் ஆராயவும் உச்ச நீதிமன்றம் முன்வர வேண்டும்.

டெல்லி மற்றும் ஹரித்துவார் மாநட்டில் இந்து மதத் தலைவர்கள் பேசியதை வெறுப்பு பேச்சாக கருதக் கூடாது. மாறாக, இந்து மதத்திற்கு எதிராகவும், அதன் கலாச்சாரத்துக்கு எதிராகவும் தொடுக்கப்படும் தாக்குதலுக்கு எதிர்வினையாகவே அவற்றை கருத வேண்டும்.

பல்வேறு காலக் கட்டங்களில், இந்து மதத்திற்கு எதிராக முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான அசாதுதின் ஒவைசி, வாஸிம் பதான் ஆகியோர் பேசி இருக்கிறார்கள். பேசி வருகிறார்கள். எனவே அவர்களையும் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x